பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

0 287
Stalin trichy visit

திருச்சி, ஆக.5  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
வயநாட்டிற்கு பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ யாரும் செல்லவில்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை சொல்வது பச்சை பொய். முதலில் அங்கு சென்றது மத்திய அமைச்சர் ஜார்ச் கொரியன் தான். ஆனால் அதை வைத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் பாஜக அப்படி செய்யாது. மக்களைவையில் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அது நிற்காது. ஏனென்றால் மத்திய அரசு ஏற்கனவே இது குறித்து தெரிவித்து விட்டது. கேரளா முதல்வரும் மஞ்சல் எச்சரிக்கை தான் மத்திய அரசு கொடுத்தது ரெட் அலர்ட் கொடுக்க வில்லை என்கிறார். ஆனால் மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததை அவரே சொல்லி விட்டார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.