திருமண மேடை அலங்கரிப்பாளர் சங்க தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்க கோரிக்கை
திருச்சி, ஏப். 11 தமிழ்நாடு தேசிய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு திருமண மேடை அலங்கரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது அதில் தமிழ்நாடு திருமண மேடை அலங்கரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டியும் – கட்டுமான தொழிற்சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மற்றும் வாகனங்களுக்கு இன்சுரன்ஸ் மற்றும் எப். சி கட்டணத்தை குறைக்குமாறு கட்டுமான சங்கத்தின் சார்பாகவும் ஆட்டோ சங்கத்தின் சார்பாகவும் – பத்திரிகைகள் வாயிலாக வும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் அத்துடன் இது சம்பந்தமான கோரிக்கை மனு ஒன்றையும் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளோம் .
இப் பேட்டியின் போது தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர் சங்கத்தின் மாநில தலைவர் எ பாலமுருகன் மற்றும் பொதுச் செயலாளர் மணிவண்ணன் மற்றும் ஆட்டோ மாவட்ட சங்க தலைவர் வி கே பி முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளர் குணசேகர் மற்றும் அமைப்பாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.