மணப்பாறையில் மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

0 227
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 25  மணப்பாறையில் மின்கட்டண உயர்வு மற்றும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவின் சார்பில் மின்கட்ட உயர்வு, ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் பெருமாள் சிறப்புரையாற்றினார்.

மின்கட்டண உயர்வைக் திரும்பப்பெற வலியுறுத்தியும், ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்கக்கோரியும், தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடாக அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தேமுதிகவினர்‌ கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.