ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து உற்சவம்

0 57
Stalin trichy visit

திருச்சி, ஆக.16  முசிறி அருகே ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து உற்சவம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசிவிசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள ஆறுமுக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு மகோற்சவ இசை விழா மற்றும் பால்குட உற்சவம் நடைபெற்றது.

94-ம் ஆண்டாக ஆடி கிருத்திகை விழா குழுவினர் நடத்தும் மகோற்சவ இசை விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோயில் திடலில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் சுபிட்சம் உடன் வாழவும் பிரார்த்தனை செய்து திரளான பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்து கொண்டு மங்கள இசை வாத்தியங்கள் முழங்க காவடி எடுத்து ராஜவீதி வழியாக உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து பால்குட ஊர்வலம் சிவாலயத்தை வந்தடைந்து பின்னர் ஆறுமுகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளினார். விழாவில் திருச்சி கரூர் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.