செல்போன் திருடியவர் கைது

0 283
Stalin trichy visit

திருச்சி ஆக16 – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் நேற்று பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி கொண்டு ஓடினார்.இது குறித்து அரவிந்த் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து முளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போதுஅவர் பெயர் ராஜா (வயது 32) திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.