தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்து தீர்மானம்
திருச்சி, ஏப். 21 மக்கள் பிரதிநிதித்துவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய பங்கு- தமிழக முதல்வர் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்து தீர்மானம்
திருச்சி மாவட்டத்தில், சத்தியம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் மாற்றுத்திறனாளி அமாவாசை தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசினர்.
அவர்கள் கூறியதாவது: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதலே மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய தலைமையில் தனித்துறை அமைக்கப்பட்டு, IAS அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைந்து வருகின்றன. இது பாராட்டத்தக்கது.”
மேலும் அவர்கள் கூறுகையில், “மக்கள் பிரதிநிதித்துவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய பங்கு வேண்டும் எனும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்து பரிசீலனைக்கு எடுத்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.”
அதே நேரத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது, அவர்கள் சுமக்கும் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதிக்கப்படாமல் இலவசமாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு சென்றால் அவர்கள் தரும் புகாரை உடனடியாக விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
“சில நேரங்களில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பின் தான் புகாருகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலைமையைத் தாங்கள் மாற்றியமைத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.