பருவமழை நீர் சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்
திருச்சி, ஜன.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பச்சைமலையில் பருவமழையின் போது வீணாகும் நீரை சேமித்து ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் சேமிப்பது குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மாவட்ட வன அலுவலர் கிரண் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்புடைய துறைசார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.