மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.48 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

0 466
Stalin trichy visit

திருப்பைஞ்சீலியில் 127 குழுக்களுக்கு ரூ.2.48 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை எம்எல்ஏ கதிரவன் வழங்கி தொடங்கி வைத்தார்.

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட திருப்பைஞ்சீலியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சி லால்குடி சரக துணை பதிவாளர் சாய் நந்தினி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி குறித்து எம்எல்ஏ கதிரவன் சிறப்புரையாற்றிய போது….

இது ஒரு அருமையான திட்டம். இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த துறையை பார்த்துக் கொள்கிறார்.மகளிர்க்கு கடன் வழங்கினால் கிராமம் மட்டுமல்ல நாடும் உயரும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். பெண்களிடம் பணம் கொடுத்தால் தான் சேமித்து வைப்பார்கள். இது நம் நாட்டிற்கும், வீட்டிற்கும், குடும்பத்திற்கும் நல்லது. நமது திமுக ஆட்சியில் இன்னும் மகளிர் சுய உதவி குழுவிற்கு நிறைய கடன் கொடுப்பார்கள். இதுவரை திருப்பைஞ்சீலியில் 60 லட்ச ரூபாய் மதிப்பில் 5 பணி முடித்து உள்ளோம். திருப்பஞ்சலிக்கு பேருந்து வசதி, குடிநீர் தொட்டி வசதி, வணிக வளாகம் என மூன்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதனை விரைவில் நிறைவேற்றப்படும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் மகளிர் சுய உதவி சேர்ந்தவர்களுக்கு 46 லட்சம் மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்யும் சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 127 குழுக்களை சேர்ந்த 1,359 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு ரூ2.48 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்யும் சான்றிதழ்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலர்கள் வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் செல்வமோகன், உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் திருப்பைஞ்சீலி செல்வராஜ், கரியமாணிக்கம் ராஜசேகர், பணமங்கலம் விஸ்வலிங்கம், எதுமலை முருகன்,கிளியநல்லூர் பிரபு,திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் சுய உதவி குழு சேர்ந்த பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.