பேரரசர் முத்தரையர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மாலை அணிவித்து மரியாதை

0 430
Stalin trichy visit

திருச்சி, மே 23 பேரரசர் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு 1,349 வது சதய விழா கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என் நேரு, தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருன்நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் உள்ளிட்ட திமுகவினர் முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், முத்திரையர் சங்கங்களை சேர்ந்தவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு ஒத்தக்கடை பகுதியிலும் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.