வாக்கு எண்ணும் மைய்யத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 188
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25  திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்சி  ஜமால்  முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-க்கான தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

அந்த வகையில்  திருச்சிமாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில்

138 மணப்பாறை, 139 – ஸ்ரீரங்கம், 140 – திருச்சிராப்பள்ளி மேற்கு, 141 – திருச்சிராப்பள்ளி கிழக்கு, 142 திருவெறும்பூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியும், 143 இலால்குடி, 144 மண்ணச்சநல்லூர், 145 – முசிறி, 146 – துறையூர் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் என பல்வேறு அறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று திருச்சி  புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தவும், தேவையான குடிநீர் வசதி, போதுமான கழிப்பறை வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்திடவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, முசிறி சார் ஆட்சியர் செல்வி.சுஷ்ரி சுவாங்கி குந்தியா , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அன்பரசி (கட்டிடங்கள்), தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.