கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சிக்னல்களில் பசுமை வலை

0 128
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24 கோடை காலத்தை முன்னிட்டு வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டி களுக்கு பசுமை வலை மேற்கூறை திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போடப்பட்டு உள்ளது.

கோடை துவக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து பொதுமக்களை வாட்டி வருகிறது. உச்சிவெயிலில் மக்கள் வெளியே செல்ல முடியாத அள விற்கு வெயில் 100 டிகிரிக்கு மேல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் குளிர்பான கடை மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி தங்களை உஷ் னத்தை தணித்து கொள்கின்றனர். இருப்பினும் அவசர வேலை காரண மாக பகலில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இதமாக மாநகர சிக்னல்களில் பசுமை வலை மேற் கூரை அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர காவல் துறை சார்பில் ஆண்டு தோறும் கோடைகாலங்களில், இதுபோன்ற பசுமை வலை சிக்னல்கள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் சிர மத்தை குறைக்கிறது.

இந்நிலையில் இந்தாண்டு கோடை வெயில் முன் கூட்டியே அதிகமாக உள்ளதால் திருச்சி மாந கரில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்காக, திருச்சி மாநகர காவல்துறையில் சார்பில் புத்தூர் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு திருச்சி மாநகர காவல்துறைசார்பில் பசுமை வலை மேற்கூரை போடப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.