துறையூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 253
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், பொன்னுசங்கப்பட்டி ஊராட்சி கள்ளிக்குடியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பொன்னுசங்கப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.