முசிறியில் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

0 282
Stalin trichy visit

திருச்சி, பிப்.10  திருச்சி மாவட்டம் முசிறி கை காட்டில் திமுக சார்பில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முசிறி கைகாட்டில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பெரிய கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பேசும்போது ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஊறுகாய் அளவிற்கு கூட தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளவில்லை வரி வருவாய் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு செலுத்துகிறது ஆனால் 58 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தருகிறது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியினை ஒன்றிய அரசு வாரி வழங்குகிறது குறிப்பாக உத்தரப்பிரதேசத்திற்கு 2 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது.மொத்தத்தில் 80 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கி தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கநினைக்கிறது.கடந்த எட்டு முறை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தில் தோல்வி அடைந்தும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை திமுக தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதால் தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர் மக்களால் விரும்பப்படும் கட்சியாக திமுக உள்ளது.கல்வியில் மத்திய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே உள்ளது ஆனால்தமிழ்நாட்டின் கல்வியின் வளர்ச்சி 98 சதவீதமாக உள்ளது 98 சதவிகிதம் கல்வியில் வளர்ச்சி கண்டுள்ள தமிழகத்தை ஒன்றிய அரசு கல்வி வளர்ச்சியிலும் வளரவிடாமல் தடை செய்யும் நோக்கில் செயல்படுகிறது குறிப்பாக எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு உரிய நிதியை தருவதில்லை.தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் செயல்படுவதால் ஒன்றிய அரசு அதை தடுக்கும் விதமாக தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.பட்ஜெட்டில் பீகார் மாநிலத்தை ஒன்றிய அரசு கொண்டாடி உள்ளது காரணம் அங்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது.பட்ஜெட் உரையில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டின் பெயர் இடம் பெறவில்லை.காய்கறி விலை உயர்வு ஒன்றிய அரசு தான் காரணம்.கேட்டால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு என்று கூறுகிறார்கள் காய்கறி விலைக்கும் கச்சா எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம். கல்வி மருத்துவம் சிறுகுறித்தொழில் என எதிலும் தமிழ்நாடு முன்னேறி விடக்கூடாது என்ற நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது அதனால் தான் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை.பட்ஜெட் வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்குறளை மட்டும் வாசித்து விட்டு ஒன்றிய அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனவே வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக என்னை நீங்கள் தேர்வு செய்தமைக்கு நன்றி.உங்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதற்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் போராடுவேன் என்று பேசினார்.

பொதுக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மயில்வாகனன், தர்மன் ராஜேந்திரன்தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன்,ஒன்றிய செயலாளர்கள் கே கே ஆர் சேகரன் பெரியசாமி மெடிக்கல் முரளி திருஞானம் வீரபத்திரன் நகர செயலாளர்கள் தங்கராசு,தர்மராஜ்,
விஜய் ஆனந்த், மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் முசிறி நகர செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.