பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பகிரங்க மிரட்டல் போஸ்டர்கள் : காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 114
Stalin trichy visit

திருச்சி, பிப்.11  பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு திமுக எம்எல்ஏ ஆதரவாளர்களின் பகிரங்க மிரட்டல் போஸ்டர்களால் பரபரப்பு

குளித்தலை அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்ட்டிக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத கனிமவளகொள்ளை நடந்து வருவதுகுறித்து செய்தி சேகரிக்கசென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர், எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் எம்எல்ஏ பழனியாண்டி நேரடியாக பங்கேற்று தாக்கிய வீடியோ வெளியானபிறகும் திமுக தலைமை நடவடிக்கை எடுக்காதநிலையில், இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், பழனியாண்டிக்கு எதிராக செயல்படும் தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசியல் அதிகார கும்பலை கண்டித்து திருச்சி முழுவதும் “எச்சரிக்கை எச்சரிக்கை ” என குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது திமுக எம்எல்ஏக்களுக்கு மற்றும் திமுகவிற்கு எதிராக செய்து வெளியிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு எதிராகவே விடுக்கப்படும் ஒரு பகிரங்க மிரட்டலாகவே கருதப்படுகிறது.

பத்திரிகையாளர்களை மிரட்டி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.