துறையூரில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, நவ.12 திருச்சி மாவட்டம் துறையூர் சிவாலய திருமண மண்டபத்தில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மேன் தர்மன் ராஜேந்திரன் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.