உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம்
திருச்சி, நவ.12 உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் செழியன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
திருச்சி,கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நான்கு மண்டல அளவில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அரசின் கூடுதல் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, தொழில் நுட்ப கல்வி ஆணையர் ஆப்ரஹாம், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.