தி.மு.க. சார்பு அணி புதிய பதவிகளுக்கு விருப்பமனு : அமைச்சர் அன்பில்மகேஸ் அறிக்கை

0 648
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி, தொண்டர் அணி, தி.மு.கழகத்தில், கழகத்தின் சார்பு அணிகளான விவசாய அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பொறியாளர் அணி விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நல அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்று சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி போன்ற அணிகளுக்கு,

மாவட்ட கழகம்:   தலைவர் 1,   துணை தலைவர்-1,     துணை அமைப்பாளர் -5

மாநகர கழகம்: தலைவர் -1,  துணை தலைவர் -1,   அமைப்பாளர் -1, துணை அமைப்பாளர் -5,

ஒன்றிய கழகம் : அமைப்பாளர்-1,  துணை அமைப்பாளர் -5

நகர கழகம் : அமைப்பாளர் -1,  துணை அமைப்பாளர் -5

நகர வார்டு கழகம் : அமைப்பாளர்-1. துணை அமைப்பாளர் -3

பேரூர் கழகம் : அமைப்பாளர் -1,  துணை அமைப்பாளர் -3

பேரூர் வார்டு கழகம் : அமைப்பாளர்-1.  துணை அமைப்பாளர் -2

பாகம் (பூத்) அளவில்  :  அமைப்பாளர் -1, துணை அமைப்பாளர் -2

(இளைஞர் அணி, மகளிர் அணி,

மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி)

குறிப்பு :

  1. வயது வரம்பின் காரணமாகளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில்,தலைவர், துணை தலைவர், பதவிகள் உருவாக்க படவில்லை

2.இளைஞர் அணி உச்ச வயது வரம்பு

ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர் கழகம் – 35 வயது மாவட்ட கழகம், மாநகர கழகம் – 40 வயது

  1. மருத்துவர் அணி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் மட்டும் நியமிக்க பட உள்ளது.

மேல் கண்ட படி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விருப்ப மனு படிவத்தை வண்ண நகல் எடுத்து அவற்றை பூர்த்தி செய்து கீழ் கண்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக அலுவலகங்களில் 14/12/2022 முதல் 20/12/2022 வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக அணிகளுக்கு விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும்.

1.திருச்சி தெற்கு மாவட்டம் : திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.

அலுவகம், வி.என்.நகர், 2வது கிராஸ், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி – 02

  1. திருச்சி கிழக்கு மாநகர அலுவலகம் : மு.மதிவாணன் மாநகர செயலாளர், ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 15/3, தஞ்சாவூர் ரோடு, லட்சுமிபுரம், திருச்சி -10.

3.மருங்காபுரி வடக்கு ஒன்றியம் : C.செல்வராஜ் ஒன்றிய செயலாளர், சீனிவாசா திரையரங்கம், கோவில்பட்டி, மருங்காபுரி தாலுகா,திருச்சி மாவட்டம்.

4.மணப்பாறை ஒன்றியம்: C.ராமசாமி ஒன்றிய செயலாளர்,

அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபம், கோவில்பட்டி ரோடு, மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

5.திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் : K.S.M கருணாநிதி ஒன்றிய செயலாளர், தீபம் காம்ப்ளெக்ஸ், திருவெறும்பூர், திருச்சி -13.

6.திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்: C.கங்காதரன் ஒன்றிய செயலாளர், ஐ.டி. பார்க் டபுள் ரோடு, நவல்பட்டு, அண்ணா நகர் அஞ்சல், திருச்சி – 16.

7.மருங்காபுரி தெற்கு ஒன்றியம்C.சின்ன அடைக்கண் ஒன்றியசெயலாளர், ஸ்ரீராம் அக்ரோ சர்விஸ், காவல் நிலையம் எதிரில், துவரங்குறிச்சி.திருச்சி மாவட்டம்.

8.மருங்காபுரி மத்திய ஒன்றியம்: மு.பழனியாண்டி ஒன்றிய செயலாளர்,தி.மு.க. அலுவலகம், கல்லாமேடு, பளுவஞ்சி போஸ்ட்,கோவில்பட்டி வழி, மருங்காபுரி தாலுகா, திருச்சி – 621306.

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.