ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவர்கள்- செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 6 ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைக் காலமாக அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் அரசியல் கட்சியினர் ரீல்ஸ்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் ரீல்ஸ் எடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து ஸ்ரீரங்கம் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.