காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் : நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்

0 127
Stalin trichy visit

திருச்சி, ஜன.7  காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் குறித்து நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், கூகுர் கிராமத்தில் காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் குறித்து நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் முன்னோடி விவசாயி விஜய் அவர்கள் நிலத்தில் காட்டுப்பன்றி விரட்டி குறித்து செய்முறை விளக்கமாக செய்து காட்டினர்.

விவசாயிகளின் பயிர்களை காட்டுப்பன்றி, மான் யானை மற்றும் குரங்கு போன்ற விலங்குகள் இடம் இருந்து பாதுகாக்க உதவும் வகையில் விரிஞ்சிபுரம் கேவிகே வனவிலங்கு விரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உயிரி வனவிலங்கு விரட்டியை ஒரு டப்பாவிற்கு 5 எம் எல் என ஒரு ஏக்கருக்கு 100 டப்பாக்கள் வரப்புகளின் ஓரத்தில் கட்டி தொங்கவிட வேண்டும்.

இது காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளில் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் அதன் மூச்சுக்குழலில் எரிச்சலை ஏற்படுத்துவதன் மூலமாக விரட்டியடிக்கப்படுகிறது.

இதனை செய்முறை விளக்கமாக நாளந்தா மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா. சாம் குமார், ஜெ. சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர்  அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர்.பா.குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப. நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ம. சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செய்து காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.