நோய் பரப்பும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டி
திருச்சி பீமநக பழைய எண் 48 புதிய எண் 51வது வார்டு கீழக்கொசத்தெருவில் குடிநீர் தொட்டியில் சாக்கடை கழிவு நிரம்பி இருக்கிறது. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கு மிக சிரமமாக உள்ளது.

மேலும் தேங்கியுள்ள நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலோரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவு நீரை நீக்கி குடிநீர் குழாயை மேல் மட்டத்திற்கு வைத்து, தொட்டியை மூட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.