திருச்சி – கரூர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
திருச்சி, பிப்.15 திருச்சி – கரூர் சாலையில் அரசு பள்ளிகள் அமைந்து உள்ள இடம் வளைவு பகுதியும் விபத்து பகுதியுமான திருச்செந்துறை அருகே கடந்த ஒரு வாரத்திற்க்கு மேல் மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. மேற்கண்ட குறைபாடுகள் காரணமாக அப்பகுதியில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்ச மாவட்ட சாலை பயனீட்டாளர்களின் நலக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.