ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்; சார் மாநகராட்சியில் இருந்து ஆட்கள அனுப்புங்க….!
திருச்சி மாநகராட்சி 36வது வார்டு காந்தி தெரு, பொன்மலைப்பட்டி இந்தியன் பேங்க் அருகில் சாலையில் ஒரு வாரம் மேலாக குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடை கலக்கிறது.
இதனால் தண்ணீர் வீணாவதுடன், சாலையும் சேதமாகிறது. இப்பகுதி மக்கள் தண்ணீருக்கும், சாலையில் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.