கே.கே.நகர் மாநகராட்சி பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம் K.K நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் 17.10.22 நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் துறை கேகே நகர் சரகம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் ,குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, காவல் ஆய்வாளர் நவநீதன் மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் சந்துரு ஆகியோர் போதைப்பொருள் குழந்தைகள் பயன்படுத்துவதால் உடலளவில் ,மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் பாதிப்புகள்,போதைப் பொருளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் மறுவாழ்வு குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள்,குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006ன் படி குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்தாலோ, உதவி செய்தாலோ குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டு தனது பங்களிப்பினை செலுத்தினாலோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் 2012 ன் படி குழந்தைகளை இரண்டு அர்த்தம் கொண்டு பேசுவது,சைகை காட்டுவது குழந்தைகளை பின் தொடர்ந்து பாலியல் ரீதியில் தொந்தரவு செய்வது குழந்தைகளுக்கு உடல் அளவில், மன அளவில் பாதிக்கும் வகையில் துன்புறுத்துவது, தொந்தரவு செய்வது மற்றும் பாலியல் தாக்குதல் செய்வதும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி அனைத்து குழந்தைகள் முன்னிலையில் எடுக்கப்பட்டது. குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. சைல்டுலைன் 10 9 8 செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துக் கொண்டனர்.