எடப்பாடி பழனிசாமி முகத்தில் கருப்பு சாயம் பூச்சு. அதிமுகவினர் போலீஸில் புகார்
திருச்சி, ஜூலை 25 மணப்பாறையில் எடப்பாடி பழனிசாமி முகத்தில் கருப்பு சாயம் பூச்சு: அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நேற்று முன்தினம் (23 ம் தேதி) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கான போஸ்டர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் ரயில்நிலையச் சாலை, மதுரை சாலைகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படத்தின் மீது கருப்பு சாயத்தை மர்ம நபர்கள் பூசியிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிமுவினர் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் மணப்பாறை காவல் நிலையம் சென்று கருப்பு சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்றுபுகார் அளித்தனர்.
அதிமுக போஸ்டரில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீது கருப்பு சாயம் பூசப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.