திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கோலம்
திருச்சி, ஏப். 9 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்
திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மா. பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.