மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம்

0 8
Stalin trichy visit

திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று சுமார் 2 மணிநேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது முசிறி நகராட்சிக்கு உட்பட்டமேலவகுப்பாட்டியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டைமாடி படிக்கட்டு சுவற்றில் மின்னல் தாக்கியதில் சுவர் சேதமடைந்தது. மேலும் வீட்டில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்து முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் வழியாக மாவட்டகலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.