திருச்சி வரும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஆக. 22  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக கழக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு மாவட்ட செயலாளர் – முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !

கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 22.08.2026 சனிக்கிழமை அன்று இரவு 07.00 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார்கள் . அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு  அளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழகத் தொண்டர்கள், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.