கண்தானம் – உடல் தானம் செய்தவரின் குடும்பத்துக்கு பாராட்டு
திருச்சி, அக்.25 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாளராக பணியாற்றியவரும், திருச்சி மாநில உணவு கலை கல்லூரி முதல்வராக பணியாற்றியவரும், திருச்சி
திருச்சி ட்ராவல் பெடரேசன், ஃப்ரீமேசன், நகைச்சுவை மன்றம், மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு போன்ற பல இயக்கஙாகளில் மூலம் பொதுநலப்பணியை நற்பணியாற்றிய பொன்இளங்கோ(74) மறைவுக்கு பிறகு தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக வழங்க பதிவுசெய்துள்ளார்.
24/10/25 அன்று அவரது கண்கள் கொடையாக வழங்கி இருவருக்கு கண் கொடுத்தார்.
அவரது உடல் அவரது விருப்பப்படி 25.10.2025 காலை 11.30 மணியளவில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
அவரது விருப்பத்தை நிறைவேற்றி கொடையை முன்னின்று வழங்கிய அவர்களின் குடும்பத்தினர் அவரின் உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ளனர். இச்செயல் சமூகத்தில் உயிர்ப்புத்தரும் மனிதநேய உதாரணமாக திகழ்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு கல்வி நலனுக்காக உடலை தானம் செய்த குடும்பத்திருக்கு அவரின் கண்களையும், உடலையும் தானமாக வழங்கி உயர்ந்த மனிதநேயப்பணியை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாராட்டப்படுகிறது.
இவரது உயர்ந்த மனப்பாங்கிற்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக
பாராட்டுகளுடன் நன்றியை மக்கள் சக்தி இயக்கம், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், தெரிவித்தார்.