அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை முகாம்

0 355
Stalin trichy visit

வசந்தம்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வசந்தம்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது.

லால்குடி லயன்ஸ் சங்கம், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து லால்குடி வசந்த நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது..இந்த முகாமில் டாக்டர் ரம்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் 289 மாணவர்களை பரிசோதனை செய்து குறைபாடுள்ள 43மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர் .33 மாணவர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்
லயன்ஸ் சங்க தலைவர் லயன் .சிவக்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் லயன் சி ரோமியோ வரவேற்புரையாற்றினார்.லயன்ஸ் வட்டார தலைவர் லயன்.கலியமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் வெங்கடேசன், லயன் பழனிசாமி, லயன் வாசுதேவன், லயன் செல்லபாண்டியன்,பள்ளி தலைமை ஆசிரியை திருமதி நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .முகாம் ஏற்பாடுகளை ஜோசப் மருத்துவ மனை மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.லயன் ரெ.அசோகன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.