நடிகர் விக்ரம் போன்று வேடம் அணிந்து வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

0 511
Stalin trichy visit

திருச்சி, ஆக.15  விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்பட கதா பாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் – திரையரங்க நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் , G.V. பிரகாஷ் குமார் இசையில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். தங்கலான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது

இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள LA சினிமாஸில் இந்த திரைப்படம் இன்று வெளியானது.

திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் சிலர் தங்கலான் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்கிற்கு வந்திருந்தனர் அவர்களிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்

இந்நிலையில் LA சினிமா நிர்வாகம் சார்பாக மேலாடை இன்றி உள்ளே வரக்கூடாது என அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் அவர்கள் மேலாடை அணிந்த பின்பு திரையரங்கினுல் அனுமதிக்கப்பட்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.