மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் செல்வம் தலைமையில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மணப்பாறை வட்டாட்சியர் மூவர்ண குடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி சுதந்திரப் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்.
விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரம் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் மணப்பாறை கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர போராட்டம் குறித்து வட்டாட்சியர் பேசினார்.