இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
திருச்சி, ஜூன் 23 விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்ட் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மண்டல அலுவலகத்தை விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் முற்றுகையிட்டு போராட்டம்
100 நாள் சம்பளம், முதியவர் சம்பளம், பென்ஷன் அரசு என கொடுக்கும் பணத்தை கடனுக்காக பிடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்த பிறகும் அதனை பிடித்து கொள்ளும் வங்கி அதிகாரிகளை பதவி நீக்க வேண்டியும்,
கடன் வாங்கிய விவசாயிகளை அழைத்து one time settlement என்று கூறி பணம் முழுமையாக பெற்று கொண்டு அதன் பின்பு பத்திரம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வேறு வங்கிகளுக்கு சென்று கடன் கேட்டால் சிவில் இல்லை என கூறுகின்றன அதனை தடுக்க வேண்டியும். கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்
காவிரியில் போர் போட்டு குடிநீர் ஏற்பதை எடுப்பதை தடுக்க வேண்டும் மேலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அல்லது கதவணை கட்ட வேண்டும்
100 நாள் வேலை ஆட்களை விவசாயத்திற்கு அனுப்பி விவசாயிகளிடம் பாதி சம்பளம் வாங்கிட உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் வங்கி முன்னே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.