குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

0 252
Stalin trichy visit

திருச்சி, பிப். 29 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயி குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்.

விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்து அதனை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில் அவர்கள் மீது தண்ணீர் புகை கொண்டு வீசுதல் காவல்துறையினரை வைத்து தடியடி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட வன்முறை செயலில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு உடனடியாக அராஜக போக்கை கைவிட வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.