பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வலியுறுத்தி பாரதிய மஸ்த்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 227
Stalin trichy visit

திருச்சி, பிப். 29  தமிழ்நாடு புதுச்சேரி பாரதிய மஸ்த்தூர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டு தீர்மானங்களில் முன் வைக்கப்பட்டுள்ள பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்திட கோரியும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திடக் கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்திட கோரியும், செப்டம்பர் 17 ஐ தேசிய தொழிலாளர் தினமாக அறிவித்து ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்திடக் கோருவது உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய மஸ்த்தூர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் திவாகர் தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.