அருட்தந்தை ஸ்டேன்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சி : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்பு
திருச்சி, ஜூலை 7 அருட்தந்தை ஸ்டேன்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உங்கேற்புள்ள விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஸ்டேன்சாமி ஜார்கண்ட் மாநிலத்தில் அருட்தந்தையாக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந் தார். அவர் அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் உரிமைகளை மீட்க போராடிய நிலையில் அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அங்கு இறந்து விட்டார்.
அருட்தந்தை ஸ்டேன்சாமி நினைவு தினத்தை கிறிஸ்தவ இயேசு சபையினர், மனித உரிமை போராளிகள், பல் வேறு கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் விரகாலூர் கிராம பொதுமக்கள் மனித உரிமை தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் விரகாலூர் கிராமத்தில் புனித வியாகுல அன்னை ஆலய வளாகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடந்தை மறைமாவட்ட முதன்மைகுரு பிளோமின்தாஸ் முன்னிலையில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அருட்தந்தை ஸ்டேன்சாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பங்குத்தந்தை ஆரோக்கியசாமி வரவேற்று பேசினார்.
பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில்,
அருட்தந்தை ஸ்டேன்சாமி நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனது பாக்கியம் எனவும் நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த கட்சியில் இவர் இறந்ததற்கு ஒரு அறிக்கை விட வேண்டும் என கட்சித் தலைவரிடம் வலியுறுத்தினேன் ஆனால் கடைசிவரை அந்த அறிக்கை வரவில்லை. ஆனால் தற்போது ஒரு சபாநாயகராக அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
ஸ்டேன் சுவாமி நில உரிமை கல்வி பழங்குடி மக்களுக்கு முன்னேற்றம் சட்ட விழிப்புணர்வு குறித்து எளிமையாக மக்களோடு மக்களாக பழகி வாழ்ந்தவர் தான் இந்த ஊரைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி என புகழாரம் சூட்டினார்மேலும் அவர் இறந்த பிறகும் அவர் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும் நீதிமன்றம் விசாரணையின் முடிவில் அது தெரிய வரும் .
அருட்தந்தை ஸ்டேன்சாமி நினைவு நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு முதல் சமூக நீதி விருது பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வழங்க வேண்டும் அந்த விருது எனது சொந்த செலவில் வழங்குவதற்கு தயாராக உள்ளேன் எனவும் பேசினார்.
முன்னதாக சபாநாயகரை திருச்சி புறநகர் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன் முன்னிலையில் லால்குடி மேலவாழை த.வெ.க. பிரமுகர் தொழிலதிபர் என்ஜினீயர் மரியபிரான்சிஸ் வரவேற் றார். இதில் சிலம்பரசன், பிராங்கிளின், பவுல், எபினே சர், சார்லஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.