கொள்ளிடம் ஆற்றில் முதலையை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

0 132
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த முதலையை புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்தனர்.

லால்குடி அருகே செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றின் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 43 வயதான சந்தோஷ் சென்னையில் உள்ள தீயணைப்பு நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பாரதி தலைமையில் வீரர்கள் ஜான் கிங்ஸ்லி, மணிவண்ணன், ரமேஷ்குமார், மணிகண்டன், விஜய் வெங்கடேஷ் முகமது சமீர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட குழுவினர் விரைந்து சென்று சுமார் 300 கிலோ எடைக்கு மேல் உள்ள உயிருடன் பிடித்து வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.