உத்தமர்கோயிலில் வைகாசி தேர்த் திருவிழா முதல் நாள்

0 199
Stalin trichy visit

திருச்சி, மே 14  உத்தமர்கோயிலில் வைகாசி தேர்த் திருவிழாவின் முதல் நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முதல் நாளில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.இக்கோயிலில்
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக விநாயகர் பூஜை, எஜமானர் சங்கல்யம், புண்ணிய ஹவாஜனம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
[
இதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பூஜைகள் நடைப்பெற்று கொடியினை கொடி மரத்தில் ஏற்றினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். இந்நிலையில் வைகாசி தேர்த்திருவிழாவின் முதல் நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது.தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா வருகின்ற 21 ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.