வேலை கிடைக்காததால் விரக்தி: கப்பல் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை

0 478
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாணிக்கப்புரத்தில் வேலை கிடைக்காத மன விரக்தியில் மரைன் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம் அருகே மாணிக்கபுரம் வடகரையைச் சேர்ந்தவர்  பிரேம் பிலிப்ஸ் ராஜ் (26). இவர் மரைன் இன்ஜினியர் பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்சமயம் தனது வாழ்வாதாரத்துக்காக டிராக்டர் ஓட்டி வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் தான் படித்த படிப்பு கேற்ற வேலை கிடைக்காதால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அவர் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார்.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.