பாஜக மாநிலத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை
திருச்சி, ஏப். 21 மணப்பாறை அருகே பாஜக மாநிலத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் புதிதாக பொறுப்பேற்றக் கொண்ட நிலையில் அவர் முதல்முறையாக திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தார். இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அவருக்கு திருச்சி மாவட்டம், மணப்பறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே பாஜகவினர் தாரை தப்பட்டை முழங்க பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்த மலர்கள் தூவி மகிழ்ச்சி பொங்க கட்சியினர் கொடுத்த வரவேற்பை பெற்றுக் கொண்ட மாநிலத்தலைவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அங்கு பறை இசையை இசைக்க அதற்கு முதியவர் ஒருவர் வைஃப்பாகி ஆடிய நடனம் தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.