கோடைக்கால தண்ணீர் பந்தல் : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்

0 291
Stalin trichy visit

திருச்சி,ஏப்.21  மணப்பாறையில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்கள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், ரோஸ் மில்க் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தாகம் தணித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்குமார், நகர நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, கோபி, இலியாஸ், தங்கப்பாண்டி உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.