‘ஜி’ கார்னர் விபத்தில்லா பகுதியாக மாற்றப்படும்:துரை வைகோ எம்.பி.
திருச்சி, பிப்.24 கருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி – கார்னர் பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்றப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறினார். திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக மதுரை கோட்ட அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் பிரவீன் குமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ சந்தித்து பேசினார்.
அப்போது மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொன்மலை கார்னர் பகுதியில், காலகாலமாக ஏற்பட்டு வரும் விபத்துகளை, உயிர்பலிகளை, போக்குவரத்து சிக்கல்களை முழுவதுமாக நிவர்த்தி செய்வதற்கு உரிய ஒரே தீர்வாக, அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக அக்.1.2024 அன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவை அளித்திருந்ததையும், அதன் அடிப்படையில், கடந்த 11 ஆம் தேதி அன்று நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் ஜி கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாகவும், ஜன.25 அன்று தென்னக இரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டதையும் அப்போது எனது கோரிக்கையை ஏற்று தேசிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயாரித்துவந்த சுரங்கப்பாதைக்கான திட்ட வரைபடத்தை, ரயில்வேத் துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டி, இதுவரை அதிகாரிகள் வழங்கிக்கொண்டிருக்கும் ஒத்துழைப்பிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். தொடர்ந்து ஒன்றிய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிப். 6 அன்று டெல்லியில் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, இதுகுறித்த எனது கோரிக்கை கடிதத்தை வழங்கி, அதை அவசரமாக நிறைவேற்றித்தரவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து, , திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிட வழிவகை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டதையும் கூறினர். இச்சந்திப்பின் போது கருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கார்னர் பகுதியில் வாகனச் சுரங்கப் பாதை அமைக்க தேவையான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டார். சுரங்கப்பாதை அமைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். விரைவில், திருச்சி – கார்னர் பகுதியில் வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு, கருப்பு பகுதி என்ற பெயர் நீங்கி, அது விபத்தில்லா பகுதியாக மாறும் என்று நம்புகிறேன் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.