மணப்பாறையில் மோடி அரசைக் கண்டித்து பொது வேலை நிறுத்தப் போராட்டம்

0 309
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 10  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்து அகில இந்திய மைய கவுன்சில்(AlCCTU ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) சார்பாக தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். 3 குற்றவியல் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
100 நாள்வேலை திட்டத்தை ஒழிக்காதே! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடைபெற்றது.
காமராஜர் சிலையில் பேரணி துவங்கி IOB வங்கி முன்பு சாலை மறியல் போரட்டம்
AlCCTU மின்சாரவாரிய மாநில துணை தலைவர் P.இராஜேந்திரன், AlCCTU பொதுகுழு உறுப்பினர் ஆவா, இளையராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,

பெரியார் சிலை ஆட்டோ சங்க தலைவர்  K.அப்பாஸ், கோவில்பட்டி ரோடு ஆட்டோசங்க செயலாளர் R. கமல்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

AlCCTU மாநிலபொது செயலாளர் வழக்கறிஞர்
கே.ஜி தேசிகன், சிபிஐ(எம்.எல்) மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S.ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  போரட்டத்தை வாழ்த்தி சிபிஐ(எம்.எல்) நகர செயலாளர் பி.பாலு பேசினார்.

நிகழ்வில் மாவட்டகுழு உறுப்பினர்கள் மெக்கானிக் இளையராஜா,
எம்.தங்கராஜ், எம், பழனிவேல், ஆர்.ராமாயி நகரகுழு உறுப்பினர்கள் B.பாலகுமரன்,
R. ஜோதிபாசு, J. பாஸ்கர், T.அறிவழகன்,  K.ஷாகின்ஷா, A.கனகராஜ் ஒன்றியகுழு உறுப்பினர்கள்
P. சின்னு, D.ஈஸ்வரி, P.பெருமாள், V. மணிகண்டன், மற்றும் CPI(ML), AlCCTU நிர்வாகிகள் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்,

Leave A Reply

Your email address will not be published.