தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி: கிராம மக்கள் மறியல்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம், காட்டுக்கொட்டகை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. கடந்த ஒருமாதத்தில் சுமார் 100 ஆடுகள், கன்றுக்குட்டிகள், பசுமாடுகளை கடித்துக் குதறி உள்ளன. இதில் பல ஆடுகள் இறந்து உள்ளன. எனவே அந்த நாய்களை பிடிக்க கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று உப்பிலியபுரம் காவல் சரத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி இவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து கொண்டு ஆடுகளை வளர்த்து வருகிறார் சம்பவத்தன்று இவரது ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதால் இரண்டு ஆடுகள் உயிரிழந்த நிலையில் இரண்டு ஆடுகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இப்பகுதியில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கோழிகளை குறி வைத்து தெரு நாய்கள் கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் மேலும் இது பற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அறிந்த உப்பிலியபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் ஈடுபட்டவர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்து தருவது உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர் இச்சம்பவம் இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
			