மது போதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்கு

0 278
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சிறீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன், அருண்குமார், முகமதுமீரான், செந்தில் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை போதையில் உள்ளதை கண்டறியும் கருவி மூலம் சோதனையிட்டனர். இதில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் மதுபோதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பேருந்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 32 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.