ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

0 129
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 16  திருச்சி ஜூலை 16 திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் முல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 63 ) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் இவர் கடந்த 11ஆம் தேதி வீட்டின் கதவு மற்றும் பீரோவை பூட்டாமல் முன்பக்க கேத்தை மட்டும் கூட்டிக்கொண்டு உறவினர்களுடன் காரில் வெளியூர் புறப்பட்ட சென்றார் பின்னர் மூன்று தினங்கள் கழித்து வீடு திரும்பினார்.
பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14 கிராம் தங்க நகைகள் 25 கிராம் வெள்ளி நகை செல்போன் லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது பற்றி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.