வாலிபர் மயங்கி விழுந்து சாவு

0 235
Stalin trichy visit

திருச்சி ஜூலை 16 திருச்சி காந்தி மார்க்கெட் எடத்தெரு ரோடு பிள்ளைமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) இவரது மகன் ரோகன் ரெமி ஜென்ஸ் (வயது 24) இவர் காந்தி மார்க்கெட் பாய் கடை சந்து பகுதியிலுள்ள பொது கழிப்பிட பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் ரோகன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.