சென்னையில் இருந்து திருச்சி வழியாக தமிழக முதல்வர் கரூர் பயணம்

0 51
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 10 சென்னையில் இருந்து திருச்சி வழியாக தமிழக முதல்வர் கரூர் பயணம்!

விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். வழிநெடுகிலும் அவரை வரவேற்றுச் சாலையின் இருபுறமும் தவெக (TVK) கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள திருச்சி – புதுக்கோட்டை, திருச்சி – சென்னை மற்றும் திருச்சி – கரூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாநகரில் முதல்வரின் பயணத்தடத்தில் சாலையோரம் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் வசதிக்காகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய புகைப்படங்களுடன் கூடிய பிளக்ஸ் பேனர்கள் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டுள்ளன. பத்மநாபன்,பூபதி நாகநாதர் பாண்டி, உஸ்மான் பாபு ராஜேந்திரன் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.