இந்திய அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக நொறுங்கிய எலும்பை இணைத்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை!
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே கன்னிராஜா பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (67).கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கி இடது முழங்காலுக்கு மேல் தொடை எலும்பு உடைந்து மனப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் அவரால் கடந்த 2 வருடமாக கால் ஊன்றி நடக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதமான பின்பு மருத்துவஅறிவுரையின்படி நடக்க முயற்சி செய்த போது , உள்ளே வைத்த பிளேட்டு ஸ்குருக்கள் படபட வென உள்ளேயே உடைந்து விட்டன. இந்த நிலையில் மீண்டும் தனக்கு அறுவை சிகிச்சை செய்த அதே தனியார் மருத்துவமனையை அணுகியபோது எலும்புக்குள் பொருத்திய ஸ்குருக்கள் பிளேட் உடைந்து விட்டது. அதை எடுத்துவிட்டு மீண்டும் பொருத்தும் சிகிச்சை வசதி இங்கு இல்லை. இதனால் மதுரை அல்லது சென்னைக்கு செல்லுங்கள் என்று கைகழுவிடவே செய்வதறியாமல் கடந்த 2 வருடமாக நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

சில வாரங்களுக்கு முன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சவலான , சிக்கலான, சென்னை மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதை தொலைகாட்சி மற்றும் செய்திதாளின் மூலம் அறிந்த பழனிசாமி துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தவரை எலும்பு மூட்டு அறுவை சிகிச்கை நிபுணர் மருத்துவர் ஜான் விஸ்வநாத் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, பழனிசாமியின் தொடை எலும்பின கீழ்பகுதி பல சுக்குகளாக நொறுங்கிய நிலையில் இருப்பதையும் அவை கள இரத்த ஓட்டம் இல்லாமல் உயிரற்ற நிலையில இருப்பதையும், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின போது பொருத்தப்பட்ட 5 ஸ்குருக்கள் எலும்பு உள்ளேயே உடைந்திருப்பதையும், எலும்பு முறிவை இணைக்க பொருத்தப்பட்ட முக்கிய பிளேட்டும் இரண்டு துண்டாய் உடைந்திருப்பதையும், 2 வருடங்கள் ஆகியும் எலும்பு இணையாமல் அதிக இடைவெளியுடன் இருப்பதையும் கண்டறிந்தார்.
மேலும் பழனிசாமிக்கு சர்க்கரை நோய் கட்டுபாடு இல்லாமலும் வயது மூப்பினால் இருதய கோளாறும் இருப்பதையும் கண்டறிந்தார். இதனால் அவருக்கு செய்யவிருக்கும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்பதாலும் அதற்கான எழும்பு மூட்டு அறுவை சிகிச்சை கருவிகள், அவசர உயிர் மீட்பு மற்றும் காக்கும் கருவிகள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்றும் அனைத்து நவீன வசதியுள்ள வேறு உயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று மருத்துவர் ஜான் நோயளிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்தநிலையில் பழனிசாமி மற்றும் உறவினர்கள் இங்கேயே செய்யுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையை செய்வதறியாது தவித்த மருத்துவர் ஜான் விஸ்வநாத் தனக்கு பழக்கமான தனியார் மருத்துவமனையிலிருந்து அவசர உயிர் மீட்டு கருவிகளை தற்காலிகமாக இரவல் வாங்கி வந்து முற்றிலும் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். இதற்காக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சிறப்பு அங்கீகாரம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பழனிச்சாமிக்கு சிக்கலான, மராத்தன் அறுவை சிகிச்சையை மருத்துவர் ஜான் விஸ்வாத் , தலைமையில் தனியார் மயக்கமருந்து நிபுணர் மருத்துவர் பாரதி மற்றும் செவிலியர்கள் தமிழ்செல்வி, பிராபா, தனலட்சுமி, அறுவை அரங்கு உதவியாளர் கோபி, மற்றும் கலா குழுவினரால் தொடங்கபட்டது.
முதலில் பழனிசாமிக்கு அவருடைய இடுப்பு எலும்பில் இருந்து 500 கிராம் எடையுள்ள எலும்புகள் (எலும்பு ஒட்டு Bone Grafts) சிறு சிறு பகுதிகளாக எடுக்கப்பட்டு , எலும்பு எடுக்கப்பட்ட இடுப்பு எலும்புவெற்றிடம் இந்திய அரசு மருத்துவமனைகளின் வரலாற்றிலேயே முதன்முறையாக CMC வேலூரிலிலிருந்து பிரத்யோகமாக இந்நோயாளிக்கு வரவழைக்கப்பட்ட அதி நவீன செயற்கை எலும்பு துண்டுகளால் நிறப்பபட்டு இடை வெளி
சரி செய்யபட்டு சதையும் தோலும் நேர்த்தியாக மூடப்பட்டது.

எஞ்சிய காலின் இடைவெளியில் CMC வேலூரிலிருந்து வரவழைக்கபட்ட செயற்கை எலும்பு துண்டுகள் (Artificial Bone Grafting) நிரப்பப்பட்டன. பின்பு 12 துளை உள்ள லாக்கிங் கம்ரஷன் பிளேட்கள் தொடை எலும்பின் இருபுறமும் கண கச்சிதாமாக பொருத்தப்பட்டன.
பின்பு தசை தோல்கள் நேர்த்தியாக தைக்கப்படு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தப்பட்டது.
இவ்வறுவை சிகிச்சை சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இவ்வறுவை சிகிச்சையின் போது 4 பாட்டில்கள் முழு இரத்தம் செலுத்தப்பட்டது.
இவ்வறுவை சிகிச்சையை பற்றி எலும்பு மூட்டு தலைமை மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறுகையில்…. “இது ஒரு சிக்கலான சவலான அறுவை சிகிச்சை. நோயாளிக்கு தேவையான போன் கிராப்ட்ஸ் (ஓட்டு எலும்பு துண்டுகள்) நோயாளிடமிருந்து 500 கிராம்தான் எடுக்க முடியும். அதற்கு மேல் எடுத்தால் நோயாளியின் எலும்புகள் பாதிக்கப்படும். எனவே அதை முன்கூட்டியே அனுமானித்து அதிநவீன செயற்கை எலும்பு துண்டுகளையும் சேர்த்து வைத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். அதன்படி இந்திய அரசு மருத்துவமனைகளின் வரலாற்றிலேயே முதன்முறையாக அதி நவீன செயற்கை எலும்புகள் CMC வேலூரிலிலிருந்து பிரத்யோகமாக இந்நோயாளிக்கு வரவழைக்கப்பட்டு நேர்த்தியாக நோயாளியின் எலும்பு துண்டுகளோடு கலந்து எலும்பு ஒட்டு உறுப்பு (Bone Graftig) செய்யப் பட்டது. ‘நோயாளிக்கு சர்க்கரை வியாதியின் பாதிப்பு, இருதய பலகீனம் , வயது மூப்பினால் ஏற்படும் இதர இணை நோய்களின் தாக்கம் இவைகளின் மத்தியிலும் இந்த அதிநவீன , சவலான அறுவை சிகிச்சை, இந்த சாதராண துணை தாலுக்க மருத்துவமனையில் செய்யப்பட்டது பெரும் சாதனை மற்றும் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கெல்லாம் மிகப் பெரிய பெருமைபாகும்”. என்றார்

மேலும் அவர் “இதுபோன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு தென்காசியை சார்ந்த ஜோ அர்னால்டு என்ற 24 வயது வாலிபருக்கு தொடை எலும்பு உடைந்து, அறுவை சிகிச்சை செய்து 2 வருடங்களாகியும் எலும்பு இணைபாதால், எலும்பு முறிவை இணைய வைக்கும் அதிநவீன ஸ்டெம் செல் சிகிச்சையை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பெற்று சென்றது குறிப்பிடதக்கது” என்றார்
சென்னை – திருச்சி – மதுரை – கன்னியாகுமாரி நெடுஞ்சாலையின் மீது இருப்பதாலும் 6 வருவாய் மாவட்டங்களின் எல்லைகளின் சந்திப்பில் அமைந்திருப்பதாலும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து மற்றும் காய சிகிச்சை பிரிவு அமைத்து தரும் நீண்ட நெடு நாள் விண்ணப்பத்தை தமிழக
முதல்வர் விரைவில் நிறைவேற்றி தர இப்பகுதி மக்களும், சமூக நல ஆர்வலர்களும், நோயாளிகளும், சென்னை – திருச்சி – மதுரை – கன்னியாகுமாரி நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் இது உயிர் காக்கும் பயனுள்ள , உடனே அவசியம் அமல்படுத்த வேண்டிய திட்டம் என்று கோரிக்கை விடுவித்துள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo