தேனீக்கள் கடித்தத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் காயம்

0 291
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறப்பு வகுப்புக்கு வந்த அரசு பள்ளி மாணவிகளை தேன் பூச்சி விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் பயிலும் 10 11 12 வகுப்பு மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்தனர். பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இருக்கும் அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேன் பூச்சியை அங்கிருந்த சில வாலிபர்கள் கல் வீசி கலைத்துள்ளனர். இதனால் தேன் கூட்டில் இருந்து புறப்பட்ட தேனீக்கள் அவ்வழியே வந்த மாணவிகளையும், பொதுமக்களையும் விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது. இதில் அலறி அடித்து மாணவிகள் ஓடினர். தேனி கடித்ததில் கீர்த்தனா, வைஷ்ணவி, வைஷாலினி, சுகப்பிரியா, கனிஷ்கா ஆகியோரும் அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் ரோகித், சுந்தர்ராஜ் ஆகியோரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேன் பூச்சியால் கடிபட்டவர்களை அழைத்து சென்று சிகிச்சை அளித்திட உதவினர்.தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் மாணவிகளுக்கு ஆறுதல் கூறி தனியார் பள்ளியில் இருந்து பள்ளி வாகனம் வரவழைத்து மாணவிகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மாணவிகளை தேன் பூச்சி கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பள்ளி மாணவிகள் செல்லும் வழியில் நின்று கொண்டு வீண் தொந்தரவுகளில் ஈடுபடும் வாலிபர்கள் மீது போலீசார் வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.