மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய பிரச்சனைகள் அடிக்கடி வருவதாகவும் தெரிவித்து இன்று காலை திடீரென பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உப்பிலியபுரம் காவல் துறையினர் மாணவர்களிடையே சமரச பேச்சில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். பெற்றோர்கள் கூறுகையில் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க இப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் ஆனால் பள்ளிக்கூடத்தில் ஜாதி பிரச்சினையை காரணம் காட்டி இரு பிரிவு மாணவர்களிடையே சண்டையை ஏற்படுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர் மேலும் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கேட்டு தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர் அதற்கு தலைமை ஆசிரியர் மாற்று சான்றிதழ் தர மறுத்துவிட்டார் என கூறி வருகின்றனர் மேலும் இங்கு பணி புரியும் சக ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து தங்களை இடமாற்றம் பண்ண கோரியும் அல்லது தங்கள்பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் இப்பள்ளியில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை நடைபெற்று வருவதாகவும் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.